அணியைத் தேர்ந்தெடுக்கும் முறை
1. ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனது சார்பாக உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களில் 11 பேர் கொண்ட அணியை தொ¢ந்தெடுக்க வேண்டும்.
2. குறைந்தபட்சம் 4 பந்துவீச்சாளர்களையும, 1 விக்கெட் காப்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. 7 மட்டையாளர் 3 பந்து வீச்சாளர் போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
4. அணிக்கு ஒரு தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.
5. 11 பேரில் இருந்து ஒருவரை அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்
6. ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர்களையோ, அல்லது கலந்தோ தேர்ந்தெடுக்கலாம்.
7. ஒரு பங்கேற்பாளர் ஒரு அணியை மட்டுமே தொ¢வு செய்ய வேண்டும். கூடுதலாக ஒரு அணியைத் தொ¢வு செய்ய விரும்பினால் பதிவு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும்.
வெற்றி பெறும் முறை.
1. ஒரு ரன்னுக்கு ஒரு மதிப்பெண்ணும், ஒரு விக்கெட்டிற்கு 20 மதிப்பெண்ணும், ஒரு கேட்சிற்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
2. விக்கெட் காப்பாளருக்கு ஸ்டெம்பிங்குக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
3. 50 ரன்கள் கடந்தால் 10 மதிப்பெண்களும், 100 ரன்கள் கடந்தால் 20 மதிப்பெண்களும், 150 ரன்கள் கடந்தால் 30 மதிப்பெண்களும், 200 ரன்கள் கடந்தால் 40 மதிப்பெண்களும், 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால் 20 மதிப்பெண்களும் கூடுதலாக வழங்கப்படும். விக்கெட் காப்பாளர் 5 கேட்ச் பிடித்தால் 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்.
(எ.கா : ஒரு வீரர் 52 ரன்கள் எடுத்தால் 62 மதிப்பெண்கள். 101 ரன்கள் எடுத்தால் 121 மதிப்பெண்கள். 4 விக்கெட் வீழ்த்தினால் 80 மதிப்பெண்கள், 5 விக்கெட் வீழ்த்தினால் 120 மதிப்பெண்கள்.)
4. ரன் அவுட்டுக்கு மதிப்பெண் கிடையாது
5. அணித்தலைவருக்கு இரட்டிப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
( எ.கா : ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் 25 ரன் எடுத்து, இரண்டு விக்கெட்டை வீழ்த்தி, இரண்டு கேட்ச்சும் பிடித்திருந்தால் ( 25+(2*20)+(2*5)=) 75 மதிப்பெண் கிடைக்கும். அந்த வீரர் அணித்தலைவராக இருந்தால் அது 150 மதிப்பெண்ணாகி விடும்.)
6. உலக கோப்பை போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு அணியும் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் பா¢சுகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment